Saturday, April 19, 2008

எதை எழுத

அன்புள்ள   தோழர்களே.  

வணக்கங்கள்.  சில  நண்பர்கள்  கவிதைகளோடு  தங்கள்  அனுபவங்களையும்
எழுதுங்கள்  என்கின்றார்கள்.எதை  எழுத.தந்தையிடம்  பெற்ற  நல்ல  தமிழறிவு
இருந்தும்   நாற்பதாண்டுக்  காலம்   காந்தியடிகளின்  மீதும்  நேரு பிரான்  மீதும
பெருந்தலைவரின்  மீதும்  அன்னை  இந்திராவின்  மீதும்  கொண்ட  அன்பினால்
தமிழகமெங்கும்   யார்  யாருக்காகவோ  மேடைகளில்  மாதம்  முப்பது  நாட்களும்
பேசித் திரிந்ததையும்   அவர்கள்  பதவிகளில்  அமர்ந்தவுடன்  என்னைப்  பார்த்ததே
இல்லை  போல்  ந்டந்து  கொண்டதும்  .மீண்டும்  தேர்தல்  வந்தவுடன்  என்னைக்
கூப்பிடுவதும்  உடன்  இயக்க  உண்ர்வோடு  நான்  ஒடிப்  போன  ஏமாளித் தனத்தையும்   எழுதுவதா.நாற்பதாண்டு  கால  உழைப்பிற்கு  அவர்கள்  தராத
உயர்வினை  என்  அன்னை  தமிழின்  அன்பர்கள்  உலகம்  முழுவதும்  அரியணை
போட்டு  என்னை  அமர வைத்துப்  போற்றுகின்ற  அன்பினை  எழுதுவதா.

எழுதத்தான்  போகின்றேன்.என்  எதிர்காலத் தலைமுறைக்கு  எல்லாவற்றையும்
சொல்வது  அவர்களுக்கு  பலவற்றில்  தெளிவு  ஏற்படுத்த  உதவுமே.நன்றி.

உங்கள்    நெல்லைகண்ணன்

0 மறுமொழிகள்: