Tuesday, July 21, 2009

வாழ்த்துகின்றோம்

பொச்சரிப்பில் வாழுகின்ற சில பேர் இங்கு
பொறுப்பின்றி அனைவரையும் தாக்கித் தாக்கிக்
கச்சை கட்டி ஆடுகின்றார் ஆடுகின்றார்
கணக்காகத் தனைப் பெரிய அறிஞனென்று
இச்சையினால் எழுதுகின்றார் என்ன செய்ய
இவரும் நம் தமிழினத்தார் அன்பு செய்வோம்
பச்சையாக எழுதுகின்றார் என்றால் கூடப்
பசுந்தமிழால் எழுதுகின்றார் வாழ்த்துகின்றோம்

2 மறுமொழிகள்:

said...

நன்று! நன்று!!

said...

//இவரும் நம் தமிழினத்தார் அன்பு செய்வோம்
பச்சையாக எழுதுகின்றார் என்றால் கூடப்
பசுந்தமிழால் எழுதுகின்றார் வாழ்த்துகின்றோம்//

வாழ்த்துகின்றோம்.