Wednesday, June 3, 2009

பெருமை உண்டோ?

குணம் சேரு குணத்தின் வழி பணத்தைச் சேரு
கூறி நின்றார் நம் மூத்தோர் பல வழியில்
பணம் சேரு சேர்ப்பதற்குப் பல வழிகள்
பகருகின்றோம் அது வழியில் பணத்தைச் சேரு
எனச் சொல்லி நிற்கின்றார் இந்தச் வேளை
இது சொல்லித் தர பணமும் வாங்குகின்றார்
மனம் சேராப் பொருள் சேர்த்தல் மயக்கம்தானே
மணமான குணம் இன்றேல் பெருமை உண்டோ?

1 மறுமொழிகள்:

said...

விலையின்றி ஏதுமிங்கு கிடையாது என்பதனை
விலைசொல்லி விற்கின்றார் வேண்டுவோர் கொடுக்கின்றார்
கலைகளிலே பலவகையாம் அதிலிதுவும் ஒருவகையாம்
தலையிலேதும் இல்லாதார்
கொடுத்திடத்தான் ஏதுதடை!