Friday, March 27, 2009

பொறுத்திருப்போங்க

வேட்பாளர் சொத்துக் கணக்குக் காட்டிடு வாங்க இங்க
காட்டிடுவாங்க அதில்
விதம் விதமாய்ப் பட்டியலைப் பாத்திடலாங்க

சாப்பாட்டுக் கில்லாமல் சாலையோரத்தில் நமது
சாலையோரத்தில்
சங்கடங்கள் படுவார்க்காய் இவர்கள் வாராங்க

பாட்டனது காலத்திலே சோறு இல்லாம திங்கச்
சோறு இல்லாம
பரிதவச்ச பழைய நெலம மறந்து போட்டாங்க

ஆட்டம் போட்டுக் கோடிக் கணக்கில் அள்ளிக் கிட்டாங்க
ஆமா அள்ளிக் கிட்டாங்க
ஆரம்பத்தில் துணியுமின்றி அலஞ்சிருந்தவங்க

பாட்டன் பூட்டன் பரம்பரையே ராஜ பரம்பரை
ஆமா ராஜ பரம்பரை என்று
பல விதத்தில் சேதி சொல்லி பரிதவிப்பாங்க

ஆட்டம் இந்த ஆட்டம் இது நடக்கட்டுங்க
ஆமா நடக்கட்டுங்க
ஆண்டவனார் தீர்ப்பு உண்டு பொறுத்திருப்போங்க

1 மறுமொழிகள்:

said...

//ஆண்டவனார் தீர்ப்பு உண்டு பொறுத்திருப்போங்க//

ஆமாம் ஐயா அத் தீர்ப்புக்காகத்தான் வெம்பி வேதனையுடன் பொறுத்திருக்கின்றோம்... இது போல் கூட்டத்தினரை எதிர்கவும் கேள்விகேட்பதும் மிகக் கடினம்... எதிர்த்துக்கேட்டால் உடல் சேதம்மும் பொய்வழக்கும் தான்... இவர்களை ஆதரிக்கவே என்று இருக்குது ஒரு கூட்டம்....

பிரஞ்சு நாட்டில் மக்கள் புரட்சி வந்து இதுபோல் குள்ளநரி கூட்டங்களை நாட்டை விட்டு விரட்டி அடித்தது போல் விரட்டும் காலம் ஒருநாள் வரும் ஆனால் அப்போதும் இந்த பச்சை அடிவருடி கூட்டங்கள் காலில் விழுந்து கதறம் ஆனால் நம்பி விட்டுவிடக்கூடாது இந்த ஒட்டுப்பொறுக்கிகளை....