Saturday, February 20, 2010

இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த நாள்

இராமகிருஷ்ண பரமஉறம்சர் பிறந்த நாள்


காளியைத் தன் தெய்வம் என்றுணர்ந்து வாழ்ந்தார்
கதைகளாகச் சிறந்ததெல்லாம் சொல்லி நின்றார்
நாளெல்லாம் நல்லனவே செய்து நின்றார்
நரேந் திரனை உலகிற்கே நல்கி நின்றார்
ஏழைகளின் ஏழையாக வாழ்ந்திருந்தார்
எப்போதும் இறை நினைவில் மூழ்கி நின்றார்
வாழை யடி வாழையாக விவேகாநந்த
வள்ளலேயே சேவைக்கென தந்து சென்றார்


கிறித்துவ மதம் சேர்ந்தார் அதை உணர
கீழ்ப் படிந்து சூபியிடம் இஸ்லாம் கற்றார்
திருத்தி எல்லாம் ஒன்று என்று உணர்ந்து நின்றார்
தெய்வத்தில் பேதமில்லை என்றுரைத்தார்
வருத்தி அல்ல உணர்ந் துணர்ந்து அவரும் தேர்ந்தார்
வணங்கி நின்றார் ம்னைவியையே தெய்வமாக
கருத்து மழை பொழிந்து நின்ற அரிய ஞானி
காளி மகன் இராமகிருஷ்ணர் பிறந்தார் இன்று

1 மறுமொழிகள்:

said...

அடேடே... சார், நீங்க ப்ளாக் எல்லாம் வெச்சிருக்கீங்களா!

தொலைக்காட்சியில உங்க பேச்சைக் கேட்டு ரொம்ப ரசிப்போம். இனிமே படிச்சியும் ரசிக்கலாம்! ராமகிருஷ்ணரை நினைவில் வெச்சிருக்கிறதுக்கும், நினைவு படுத்தினதுக்கும் ரொம்ப நன்றி.

http://kgjawarlal.wordpress.com