பதிவு செய்து தொழிற்சங்கம் நடத்துகின்ற
பாங்கதனை அறியாராய் தமிழர் நாட்டில்
மதி நிறைந்த இரு வீரர் நடத்தி நின்ற
மாபெரிய போராட்டம் உமக்குச் சொல்வேன்
சதி நிறைந்த வெள்ளையர் தம் தொழிற்சாலையில்
சங்கடங்கள் துன்பங்கள் கண்டு நொந்து
விதி யென்று அதனையுமே ஏற்று வெந்து
விழலுக்கு உழைத்து நின்ற ஏழையரின்
உரிமைக்காய் குரல் கொடுத்த காரணத்தால்
உலகிலேயே முதன் முதலாய் நாற்பதாண்டு
சிறைவாசம் தனைப் பெற்றார் சிதம்பரனார்
சீரழிந்து அவர் குடும்பம் உலைந்ததன்றே
உரம் கொண்ட குரலுக்குச் சொந்தக்காரர்
உத்தமராம் சிவா அவர் உடனே சென்றார
வரலாற்றில் உழைப்பவர்க்காய் முதற் குரலே
வ்.உ.சி. சிவா தந்த இடிக் குரலே
Thursday, May 1, 2008
தமிழகத்தில் முதல் குரல்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment