தமிழனுக்குப் பொறந்தவந் தான் இங்கிலீஷு
தட தடன்னு பேசுனானா அசந்தே போனேன்
அமிழ்தம் நம்ம தமிழுன்னு நாமக்கல்லார்
அன்னிக்குச் சொன்னதெல்லாம் நெனச்சுக் கிட்டேன்
உமிழ் நீரில் பால் சேர்த்து அவங்க ஆத்தா
ஊட்டையிலே தமிழுந்தான் ஊட்டிருப்பா
கமழ்கின்ற தமிழ் விட்டு இங்கிலீஷிலே
கதைச்சாத்தான் பெருமையின்னு இவன் நெனைக்கான்
தெலுங்கினிலே பேசிக்கிட்டு இருவர் போனா
தெளிவா நான் தெரிஞ்சிடுவேன் தெலுங்கருன்னு
துளுவினிலே பேசிக்கிட்டு இருவர் போனா
சுளுவா நான் தெரிஞ்சுக்குவேன் துளுவருன்னு
கொழு கொழுன்னு மலையாளம் பேசிப் போனா
கொண்டிடுவேன் மலையாள நண்பர் என்று
வழு வழுன்னு ஆங்கிலத்தில் பேசி நின்றால்
வண்டமிழின் தன் மகனார் என்றுணர்வேன்
Monday, May 5, 2008
வண்டமிழின் தன் மகனார்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment