மலை தந்த ம்ழையாலே விளைந்த முத்து
மாலையென உருக்கொண்டு மலைகள் சேர
சிலையுருவப் பெண்ணாளின் சிவந்த மார்பில
சேர்ந்த முத்து மாலையினுக் கிடையே சென்று
அலை கடலின் பவளமதும் அவளின் மார்பில
அணிகலனாய்ச் சேர்த்தானாம் எவ்வா றென்றால்
குவியும் இதழ் மார்பகத்தில் குவித்து வைத்து
கோலமிட்டான் ப்ற்குறியால் மார்பகத்தில்
பதிந்து விட்ட பற்களது சிவந்த மார்பில்
பவள வடம் போட்டது போல் அழகு செய்ய
கனிந்து விட்டாள் பேரழகி காதலனின்
கவிதை வரி மார்பினிலே பவளமாக
புவியிலிது போற் கவிதை எங்கும் யாரும்
புகன்றதுண்டோ புகன்றீடுவீர் தமிழினத்தீர்
கவிதையிது ஜெயங் கொண்டப் பெரிய பாவி
கலிங்கத்துப் பரணியிலே புகன்றதையா
செய்யுள்
முத்து வடம் சேர் முகிழ் முலை மேல்
முயங்கும் கொழுநர் ம்ணிச் செவ்வாய்
வைத்த பவள வடம் புனைவீர்
ம்ணிப் பொற் கபாடம் திறமினோ
Sunday, May 4, 2008
பழம் பாடல் புதுக்கவிதை கலிங்கத்துப் பரணி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment