Sunday, May 4, 2008

சொரணையில்லை

     திங்காத பொருளையெல்லாம்  திங்கதுக்குத்தான்  
         தெரிஞ்சுக்கிட்டான் இந்தியங்க  அதனாலேதான்
    மங்காத்தா  சூதைப் போல்  வெலவாசிதான்
          மளமளன்னு  ஏறுதுன்னு  மாமா சொன்னார்
    எங்காத்தா  எவன்  அந்த மாமான னாக்க
          எக்குத்தப்பா  கேக்காளே  என்ன சொல்ல  
    பொங்காத்தா   எவன்  சொன்னா  ஒனக்கு என்னா
          பொறுப்பான எவன்  கேக்கப் போறான்  இங்கே

    அணுசக்தி  தந்து  நம்மை  அமுக்கணும்ன்னு
           ஆடுறானே அமெரிக்க  வெள்ளைக்காரன
    தனைச்சுத்தி  யாரேனும்  வாழுறதைத்
           தாங்காமத் துடிக்கின்ற் கொள்ளைக்காரன
    நெனச்சிட்டான்  நாம  நல்ல  சாப்பாட்டையே
           நேத்து வர  சாப்பிட்டதேயில்லை யின்னு
    கொணக்கேடு  புஷ் ஷூ  மாமா  ஒளறுதான தான்
            கூப்பிட்டுக் கேக்க  ஒரு  நாதியில்ல


    அம்மண மா  காட்டுக்குள்  அவங் கூட்டம்  திரிஞச
           அப்பவே உணவை  நாம்  மருந்தாகக்  கொண்டோம்
    எம்மண்த்தை  உணவினிலே  சேர்த்தே  நாம்  உண்டால்
           எவ்வுடற்கும்  நன்மை  செய்யும்  என்றே  அறிந்தோம்
    ந்ம்மினத்தார்  ஆடை கட்டி அரசு  செய்த காலம்
           நாடின்றிக் காட்டினில அலஞ்சவங் களெல்லாம்
    நம்மப் பத்தி  வாய்  தொறக்காம்  என்ன  செய்ய  ஆத்தா
           நாம  சொல்லி  எந்தப்பய  கேட்டு விடப்  போறான்
        

    ஆவியிலே வேக வ்ச்ச  உணவு   தன்னை  நீயும்
           அப்ப ச்ரி  இப்ப  சரி  எப்பவுமே   உண்ணு
    தாவி நல்ல  குதிக்கிறாற் போல்  உன் உடம்பு  இருக்கும்
           தடுமாற்றம்  இருக்காது  என்று  அன்றே  சொன்னார்
    மேவி அதைக் கடைப் பிடித்தால்  நோய்  நொடிகள்  இல்லை
           மென் நடையை  உணவிற்குப்  பின்னால  கொள்ளு
    ஆவி உடல் பிரியும் வரை  அவதிகளே  இல்லை
           அற்புதமாய்  பல  செய்தி  சொல்லி வைத்தார்  முன்னோர்

    யாரு  வீட்டு  உணவெல்லாம்  ஊருக்குள்ள  வந்து
           என்னென்ன  ஆட்டமெல்லாம்  போடுது  பார்  இங்கே
    காரு மேல காரு  கொண்ட  கண்ணியவான்  எல்லாம்
           கால்  மேல  கால்  போட்டுத் திங்கிற்தைப் பாரு
    நீரு  போயி  நீத்தண்ணி  குடிக்கிறதைச் சொன்னா
           நிக்க வச்சு  உமைப் பாத்து  சிரி சிரின்னு  சிரிப்பார்
    சீரு  கெட்ட  நாடாச்சு  அதனாலேதானே
           செவிட்டோடு  அறை  கொடுக்கார்  அமெரிக்க மாமா

    புஷ்ஷு  மாமா  சொல்லியாச்சு   பொத்திக் கிட்டுப்  போடா
           புவனத்துச் ச்ந்தைக்குள்ள நாம புகுந்தாச்சு
    கிஸ்ஸடிக்க  வேணுமுன்னா  புஷ்ஷு  மாமா கிட்ட
          கேட்டுக்கிட்டா நல்லதுன்னு  பிரதமரே சொல்வார
    தஸ்ஸு புஸ்ஸு இங்குலீஷ்  சிதம்பரத்து  அண்ணன்
          சண்டைக்கு வ்ந்திடுவார்  மூடிக்கிட்டு  வாடா
    ப்ஸ்ஸுக்கு  காசு  இல்ல  ஒனக்கு  என்ன  திமிரு
          பக்குவமாய்த் தேர்தலிலே  ஒட்டைப் பாத்துப்  போடு
    

3 மறுமொழிகள்:

said...

இதை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்தால்
நாண்டுக்கிட்டுதான்
சாகணும் அய்யா!

அற்புதம்!

said...

ஆஹா ஆஹா அருமை. இதைப் பார்த்தபிறகும் நம்மவர்கள் வாய் மூடி மௌனம் சாதிப்பது கொடுமையிலும் கொடுமை.

said...

///ப்ஸ்ஸுக்கு காசு இல்ல ஒனக்கு என்ன திமிரு
பக்குவமாய்த் தேர்தலிலே ஒட்டைப் பாத்துப் போடு///

அருமை!