Tuesday, May 6, 2008

வேணும் இலவசம் இன்னொண்ணு

     ஆணுறை  இங்கே  இலவசம்
           அடுப்பும்  கேஸூம்  இலவசம்
     காணும்  பொட்டி இலவசம்
           கலர் கல்ராத்தான்  இலவசம
     பேணும் கல்வி  அது மட்டும்
           பெருந் தனவந்தர்  கை வசம்
     நாண்ம் வீழ்த்தும் மதுக் கடைகள
           நமது  அரசின்  கை வசம

     தேனும்  பாலும்  வேண்டாமே
           தேக சுகங்கள்  வேண்டாமே
     நாணம்  வெடகம்  வேண்டாமே
           நாங்க கேட்பது இது ஒண்ணே
     வேணும் இலவசச் சுடுகாடு
           விரைவில்  வ்ழங்கணும்  அதை நாடு
     ஆணும் பெண்ணும்  சாகையிலே
           அக மகிழ்வோடே போகோணும்

   
     

5 மறுமொழிகள்:

said...

கொப்பளிக்கிற கோபத்தில்
குற்றாலத்தின் வேகத்தில்
தப்பைச் சுட்டும் விரலாகத்
தமிழின் விரலிங்கு நீள்கிறது
உப்புக் காகா சலுகைகளை
ஊருக்கெல்லாம் தருபவர்கள்
ஒப்பில்லாத கல்வியினை
ஒளித்ததைக் கவிதை காய்கிறது

said...

கவிஞரே..

கவிதை அருமை..

தமிழ் நடை, உடை, பாவனையுடன் உங்களிடம் விளையாடுகிறது கவிஞரே..

கவிதையில் உங்களின் கோபம் கொப்பளிக்கிறது..

நியாயமான கோபம்தான்.. உங்களைப் போன்ற பெரியவர்கள்தான் இதனைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

தமிழ்நாடு சீக்கிரமே டாஸ்மாக் கடைகள் புண்ணியத்தில் சுடுகாடாகத்தான் ஆகப் போகிறது..

said...

ஐயா, உங்களிடமிருந்து இவ்வகையான கவிதைகளுடன் நான் உங்கள் கருத்துகளுடன் கூடிய சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.

said...

உங்களது வார்ப்புரு (template)சரியில்லாததால் பதிவுகள் தெரிய நேரமாகின்றது. அல்லது ஒவ்வொரு முறையும் scroll down செய்ய வேண்டியுள்ளது. சரி செய்வீர்களா?

- சிமுலேஷன்

said...

அன்புள்ள அய்யா வணக்கம் எனக்கு
இந்த வலைத்தளம் உருவாக்கித் தந்து
என்னை எழுத வைத்த என் அன்பே
வடிவான செல்லமகன் வார்ப்புருவை
இன்று இரவே சரி செய்து விடுவதாக
உறுதி அளித்துள்ளார்.நன்றி.வாழ்க
தமிழுடன்.