இடம் மாறிப் போகாத காதலோடு
இதயத்தால் இணைந்திட்ட இருவர் இங்கு
தடம் மாறிப் போகாத தங்கள் காதல்
தன்மையினால் பெருமை கொண்டு வாழ்கின்றாராம்
நிறம் மாறிப் போகிறதாம் அவர்கள் வாழ்வில்
நெகிழ்வாகச் சொல்லுகின்றான் கடை திறப்பில்
புறம் பாடும் முன்னாலே ஜெயஙகொண்டானும்
போற்றி நிற்கும அகம் காண்பீர் காண்பீர் நீவீர்
மாலையிலே துவங்கியதாம் தழுவல் அந்த
மங்கை ந்ல்லாள் இதழ் இடையை இணைத்திட்டாளாம்
காலை வரும் என்கின்ற் நினைவே இன்றி
களியாட்டம் தொடர்கிறதாம் மேலும் மேலும்
ஆலையிட்ட கரும்பாக இருவருமே
அடுத்தவரின் உடல் பிழிந்தே ம்கிழ்கின்றாராம்
காலை வந்து தொலைத்ததுவாம் என்ன செய்ய
கனி மொழியின் தோழியர்கள் வந்து விட்டார்
வேளையற்ற வேளையிலே வந்தார் என்றே
வேதனையில் தோழியரைக் காண வந்தாள்
பாளையிதழ்ச் சிவப்பினையே காணோம் என்று
பதை பதைத்துப் போனார்கள் தோழி மார்கள்
காளை யென்ன செய்து வைத்தான் என்ற போதே
கணக்ளிலே சிவப்பினையே கண்டு விட்டார்
பேழையென்னும் கண்ணிரண்டின் வெண்மை தன்னை
பேர்த்தங்கு இதழ்களிலே தந்திருந்தான்
இரவெங்கும் விழித்திருந்தால் கண்கள எங்கும்
எப்போதும் சிவந்து விடும இதுதான் உண்மை
பருவத்தின் இதழென்றும் பவளம் என்றே
பார்த்திருந்தோம் அது வெண்மையானதென்ன
கரு விழிக்குச் சிவப்பளித்து வெண்மைதன்னை
கனி இதழும் பெற்றதனைக் கண்டு நின்றார்
தருவதிலும் பெறுவதிலும் நிறங்கள் மாறித்
தடம் மாறும் அழகினிலே மயங்கி நின்றார
செய்யுள்
வாயிற் சிவப்பை விழி வாங்க
மலர்க் கண் வெளுப்பை வாய் வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் க்பாடம் திறமினோ
Thursday, May 8, 2008
பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment