ஏழைகளை மீண்டும் எங்கும் ஏய்க்கின்றார்கள்
ஏய்த்தவர்கள் இங்கேயே வாழ்கின்றார்கள்
கோழைகளாய் அவர்களிடம் கையையேந்தி
கூட்டாளியாகி நின்றார் படித்தவர்கள்
வாழையடி வாழையென திருடர் முன்னே
வதை பட்டு வாழ்வது தான் ஏழை வாழ்வா
ஏழைகளே ஒன்றாவீர் ஆகி விட்டால்
ஏய்ப்பவர்கள் அடியோடு ஒழிந்தே போவார்
Wednesday, May 21, 2008
ஒழிந்தே போவீர்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
நெல்லை கண்ணன் அய்யா,
அய்யய்யோ என்னங்க இது?உங்களுக்கு இந்த தி மு க தலைவர்கள் மீது கோபம் இருக்கலாம்.அதுக்காக இப்படியா சாபம் கொடுப்பீங்க?
பாலா
அன்புள்ள பாலா அய்யா வணக்கம்.
இல்லை அய்யா இந்தியாவின் நிலை
கண்டு வருத்தத்தில் எழுதினேன்.
இவர்களும் அதற்குள் அடங்குகின்றனர்
நன்றி அய்யா.வாழ்க தமிழுடன்
தங்கள்
நெல்லைக்கண்ணன்
Post a Comment