நெற்றியிலே வியர்வை யது நீராக ஒடி விழ
நெய்தல் முத்து மாலையது முலைகளுடன் சேர்ந்து பட
கற்றையெனும் குழலதுவும் காடாகி நிலை குலை ய
கையணியாம் வளையல்களோ கல கலவென் றோசையிட
முற்றும் என்று சொல்லுதற்கு முடியாராய் இருவருமே
முற் பிறவிச் சுக நினைவும் இப்பிறப்பில் காண்கின்றீர்
நிற்கின்றீர் நெஞ்சத்தில் நினைப்பதெல்லாம் கலையாக்கி
நெடு விழியீர போதும் உந்தம நெடுங் கதவம் தாள் திறவீர்
செய்யுள்
கூடும் இளம் பிறையில் குறு வெயர் முத்துருள
கொங்கை வடம் புரளச் செங்கழு நீர் அளக
காடு குலைந்தலைய கைவலை பூசல் இடக்
கலவி விடா மடவீர் கடை திறமின் திறமின்
Sunday, May 11, 2008
பழம் பாடல் புதுக்கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
அட என்ன ஆச்சர்யம் நெல்லை கண்ணண் பதிவுகள் இடுகிறாரா? ஆஹா இவ்வளவு தாமதமாக தெரிந்து கொண்டுவிட்டேனே... இன்றிரவு முழுக்க பழைய பதிவுகளின் எழுத்துப்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி விடுகிறேன்:)
வாழுங்கள் நம் தமிழாம் அன்னையுடன்
வளருங்கள் மிகத்தெளிவாய்
உண்மையுடன்
தேடுங்கள் தமிழிலுள்ள
செல்வமெல்லாம்
தெரிந்தெடுத்து தந்திடுங்கள்
இளையவர்க்கு
நாடுங்கள் நல்லவற்றை
தமிழென்றாலே
நல்லதுதான் என்றன்றே
உணர்வீர் நீரே
Post a Comment