காதலர் தோள்கள் சேர்ந்து களி கொண்டு ஆடும் நேரம்
மாமதி வானில் தோன்றும் மங்கையோ் கண்டதில்லை
ஆதலால் மதிக்குத் தன்னுள் அவமானம் பிடுங்கித் திங்க
சோதிக்கச் சமயம் தேர்ந்து சோதனை செய்ததங்கு
பாதிக்கப் பட்டாள் பெண்ணாள் பனி மதிக் கதிர்கள் பட்டு
ஆதிக்க சக்தியாகி ஆட்டுது மதியும் அங்கே
வேதனைப் பட்டாள் அங்கே விரிஉயர் முலைகள் மீதே
பாதிப்பைச் செய்யும் அந்த பனி மதிக் கதிர்கள் கொண்டு
சோதனை நேரும் நேரம் சொந்தங்கள் ஒன்றே என்றும்
ஆதரவாகும் என்ற அம்மொழி உண்மை கண்டாள்
வேதனை தீர்க்க அங்கு விரி குழல் தன்னில் மங்கை
பேர் தரும் மலர்கள் சூட்டி பெருமைகள் செய்ததாலும
சாதனைப் பூக்கள் தமமைச் சார்ந்துள்ள வண்டின் கூட்டம
தாம் ஒரு பந்தலைப் போல் தளிர்க் கொடி மேலே கூடி
வான் தரும் மதியின் துன்ப வாட்டத்தை போக்கு தென்றான்
தேன் தரும் கவிதை தந்த தென் ஜெயங்கொண்டான் தானும
செய்யுள்
களபம் வண்டல் இடும கலச கொங்கைகளில்
மதி எழுந்து கனல் சொரியும் என்று
அளக பந்தி மிசை அளிகள் பந்தர் இடும்
அரிவைமீர் கடைகள் திறமினோ
்
Saturday, May 10, 2008
பழம் பாடல் புதுக்கவிதை கலிங்கத்துப் பரணி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment