பாய்ந்து வரும் தமிழழகு வார்த்தையெல்லாம
படிப் படியாய் வரி வடிவம் கொள்ளும் நேரம்
தோய்ந்து விடும் நம் மனது துள்ளி நிற்கும்
தொடர்ந்து வரும் பாடல்களில் மயக்கம் கொள்ளும்
ஆய்ந்தெடுதத தமிழ் அங்கே அழகு காட்டும்
அவனால் தான் முடியும் என்று உள்ளம் சொல்லும்
காய்தலுக்கும் உவத்தலுக்கும் ஆளாய் நின்ற
கவிஞன் அவன் செட்டி நாட்டுக் கண்ணதாசன
தாய்மையினைப் பாடி நிற்பான் தங்க மகன்
தாய்க் குலமே அவனுக்குள் அடக்கமாக
தூய்மையினைப் பாடி நின்றால் அவனுக்குள்ள
துய்ய நிற வெண் மனது தோன்றும் அங்கே
வாய்மையினைப் பாடி நிற்பான் இடையிடையே
வழி தவறிச் சென்றதெல்லாம் நினைவில் கொள்ள
ஆய்ந்தன்னை தமிழ் அவனைப் பிள்ளையாக
அரவணைத்தாள் அவன் எங்கள் கண்ணதாசன்
போய் அவனைப் படித்தி டுவீர் இளையவரே
புரியும் கவி எழுதும் வகை புரியும் நன்றாய்
காய் தெரியும் கனி தெரியும் கவி தெரியும்
கனித் தமிழின் செல்வமெல்லாம் கையில் சேரும்
வாய் திறந்தால் கவிதை எல்லாம் வடிவம் காட்டும்
வண்டமிழாள் தண்டமிழாள் உம் தமிழாவாள்
ஆய்ந்துணர்வீர் இளையவரே அன்னை தமிழ்
அவளளித்தாள் கண்ணதாசப் பேரான் தன்னை
Friday, May 2, 2008
கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
அருமை அருமை - அழக் தமிழ்க் கவிதை அருமை.
தடுமாறும் போதையிலும் கவி பாடும் மேதை - கண்ண தாசன்.
கண்ணதாசனைப் பற்றிய கவிதை மனதை மகிழ்விக்கிறது.
நன்றி
ஆஹா..கண்ணதாசனை மிக எளிதாக அற்புத நடையில் புரிய வைத்திருக்கிறீர்கள்.
நன்றி அய்யா!
Post a Comment