பழகி விட்ட பழக்கங்களை விடுவதற்கு
படுகின்றார் மனிதர்களே துன்பம் என்றால்
அழகு மிக்க ஆண் ஆனை சேரனது
ஆர்ப்பாட்டப் போரில் வெற்றி சேர்க்கும் ஆனை
பழகு தமிழ் அழகு அதன் நடையழகு
பார்த்தவர்கள் தொழுது நிற்கும் தனி அழகு
உழுது நிற்கும் பகைவர்களின் மார்பை எங்கும்
ஒரு நொடியில் பகை அழிக்கும் வீர ஆனை
முழு நிலவு நாள் தோறும் அழகு ஆனை
முரடாக மாறி நிற்கும் தன்மை கேட்பீர்
பழுதின்றி பகை நாட்டு மன்னர் தம்மின்
பளபளக்கும் வெண்குடையைப் பறித்தெறிந்து
தொழுதவரைப் பணிய வைத்த பழக்கத்திலே
தும்பிக்கை தனைக் கொண்டு நிலவும் ஏதோ
வழுவான பகை நாட்டார் குடைதானென்று
வலிந்ததனைப் பறித்திடத் தான் முயல்கிற்தாம்
முத்தொள்ளாயிரம்
வீறு சால் ம்ன்னர் விரிதாம வெண்குடையை
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண் மாக்கோதை சின வெங் களி ஆனை
திங்கள் மெல் நீட்டும் தன் கை
Friday, May 23, 2008
பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment