தெங்கிள நீர் மார்பகத்துப் பெண்ணாளவள்
சேர்ந்து விட்டாள் பாண்டியனைக் கண்ட அன்றே
மங்கையவள் மனத்திற்குள் பாண்டியனார
மகிழ்ச்சி மிகக் கொண்டிருந்தும் நேரில் காணாச
சங்கடங்கள் சில நேரம் வருவதுண்டு
சதி செய்து அன்னை யவள் தடுக்கும் நேரம்
இங்கவளும் சொல்லுகின்றாள் அன்னை யவள்
ஏமாந்து நிற்கின்ற செய்தி தன்னை
கதவடைத்து வைப்பாளாம் அங்கும் இங்கும்
காவலுக்கு நிற்பாளாம் பெற்ற பெண்ணை
நிதம் அடைத்து வைப்பதையே நீட்டிப்பாளாம்
நெஞ்சு அவன் பின்னாலே சென்று விட்ட
விதம் அறியா மடமையிலே காடை தன்னை
வேடர்களும் கூடிட்டு மூடி வைக்க
இதமாகக் கீழிருக்கும் மண் பறித்து
எப்போதோ காடையது பறந்தாற் போல
முத்தொள்ளாயிரம்
கோத்தெங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என
வேட்ட்டங்க்குச் சென்ற என் நெஞ்சறியாள்-கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை
வெறுங்கூடு காவல் கொண்டாள்
Thursday, May 22, 2008
பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment