பெற்ற தாய்க்குச் சோறு போட விருப்பமின்றி
பேணுதற்கு மனமின்றி வாழும் மாந்தர்
உற்றவர்க்கோ ஊரார்க்கோ உதவியேதும்
ஒரு போதும் செய்யாத பண்பின் வேந்தர்
கற்றவர்க்கோ கலைகளுக்கோ ஈயா அன்பர்
கையெடுத்து எவரையுமே வணங்கா மெய்யர்
மற்றவரை எண்ணாமல் தன்னை மட்டும்
மனத்தினிலே கொண்டு வாழும மனிதர் என்பார்
கற்றவர் போல் சபைகளிலே காட்டிக் கொள்ள
கையூட்டுப் பெற்றவர்கள் வசதி செய்வார
மற்றவர் முன் அவர் போடும் வேடம் கண்டால்
மனிதரென வாழ்பவர்கள் அவதி கொள்வார்
பற்றற்ற மனிதரைப் போல் கோயிலுக்குள் அவர்
பக்தி வேடம் போடையிலே இறைவன் செல்வார்
கற்றவரோ ஒரு போதும் போலியான இந்தக்
கயவர்களை மனிதரென்று கொள்ள மாட்டார
உற்றவர்க்கு உதவுங்கள் உறவை யெல்லாம
உயர் நட்பாய்க் கொள்ளுங்கள் நட்பையெல்லாம்
மற்றவர் போல் எண்ணாமல் உறவாய் மாற்றி
மனிதரென வாழுங்கள் இறைவன் உங்கள்
முற்றத்தில் என்றென்றும் காத்திருப்பான் அந்த
மூலப் பொருள் உங்களையே பார்த்திருப்பான்
கற்றல் என்றால் இது ஒன்றே கற்றல் ஆகும்
கனிந்திடுவீர் அன்பு கொண்டே பணிந்திடுவீர்
Tuesday, May 27, 2008
உதவுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு
இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்
என்னும் பாரதி வரிகள் நினைவுக்கு வந்தன.
Post a Comment