Friday, May 16, 2008

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

        பதினெட்டு  வயதேதான்  பாண்டியர்க்கு
                பையனென்று  கேலி  செய்தோர்  நாடிழந்தார்
       கதியற்றுப்  போனார்கள்  இளைஞனென்று
                கணக்கிட்டோர்  களி  யானைத் தென்னன்  முன்னே
       விதி கெட்டுப்  போனவர்கள்  வாய்க் கொழுப்பால்
                வீடிழந்தார்  நாடிழந்தார் வீதி  சேர்ந்தார்
       மதிகெட்டுப்  போனாரின்  நாட்டையெல்லாம்
                மன்னன் அவன்  கொண்டதிலே  நியாயம்  உண்டு



      கதி கெட்டேன்  நான்  அவனைக் கண்ட பின்னர்
                கை  தொழுது  அவன்  காதல்  வரமே கேட்டேன்
      பதி நான்தான்  என்று  சொல்லி  என்னை  வந்து
                பக்குவமாய்  ஏற்றிடுவான்  என்றே  நின்றேன்
      விதி விதி  பார்  எந்தனது  நிறமே  கொண்டான்
                வீரனவன்  செய்கை  இது  நியாயம்தானா
      எதிரிகளின்  பார்  பறித்தான்  இகழ்ந்ததாலே
                 ஏந்திழை  நான்  பணிந்து  நின்றும்  நிறம் பறித்தான்

      மாந்தளிரின்  நிறம்  பறித்தான்  மனம்  பறித்தான்
                  மங்கையெந்தன்  நலமெல்லாம்  பறித்துக்  கொண்டான
      சாந்துணையும்  அவன்  துணைதான்   என்று  முன்னே
                  சரணடைந்து  நின்றாளைக்  கொன்றே  போட்டான்
      வேந்தனவன்  செய்கையிதில்  நியாயமுண்டோ
                  வேதனையைச் சேர்த்ததிலே  பண்புமுண்டோ
       ஆம்  தமிழாள்  கேட்கின்றாள்  என்ன  சொல்வீர்
                   அகம்  அறிந்த  தமிழர்களே  உம்மைக் கேட்பேன்


                                   முத்தொள்ளாயிரம்


                    களியானைத்  தென்னன்  இளங்கோ  என்று  எள்ளிப்
                    பணியாரைத் தம்  பார் இழகக  -  அணி  ஆகம்
                    கை தோழுதேனும்  இழக்கோ  நறு மாவின்
                    கொய் தளிர்  அன்ன நிறம்
      

2 மறுமொழிகள்:

said...

இப்படி வெறும் பாடல்களாக மட்டும் எழுதாமல், கொஞ்சம் தெளிவுரை எழுதினால் நன்றாக இருக்கும்.

எப்படியான சூழலில் இந்த பாடல் எழுதப்பட்டது என்பது போல.

said...

அய்யா வணக்கம்.சேர,சோழ,பாண்டியர்கள்
மேல் பல புலவர்கள் பாடிய பாடல்கள்.ஒவ்வொருவரின் மீதும்
தொள்ளாயிரம் பாடல்கள் பாடியுள்ளனர்.கிடைத்தது சில நூறு
பாடல்களே.புலவர்களின் பெயர்கள்
கண்டறியப் படவில்லை.நன்றி.
வாழ்க தமிழுடன்.
தங்கள்
நெல்லைக்கண்ணன்