போகக் களம் விட்டுப் போர்க்களம்தான்
போகையிலே சொல்லி விட்டுச் சென்ற காளை
ஆகச் சில நாளில் வநதே சேர்வான என்று
ஆர்வமுடன் காத்திருந்தாள் ஆசைப் பெண்ணாள்
தாகம் மிகக் கொண்டாள் தழுவலுக்காய்
தடுமாறித் துடிக்கின்றாள் விழிகள் ஏங்க
நாகப் படம் போன்ற பெண்ணழகோ
நாள்ப் பலவாய் உறக்கத்தை கெடுத்ததங்கு
வருவது போல் எண்ணத்தில் ஒடியங்கு
வாயிற் க்கதவில் இட்ட தாழ் திறந்தாள்
வரவில்லை என்றவுடன் மனம் தளர்ந்து
வாட்டமுடன் தாழினையே இட்டாள் மீண்டும்
ஒரு முறையா இரு முறையா பல முறைதான்
ஒடி ஒடித் திறந்தாளாம் மூடினாளாம்
திருகுகின்ற குமிழதுவும் தேய்ந்த சேதி
தென் தமிழான் ஜெயங் கொண்டான் சொல்லுகின்றான்
செய்யுள்
வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
தேயும் கபாடம் திறமினோ
Wednesday, May 14, 2008
பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment