தாமதமாய் வந்து விட்ட காளை கண்டான்
தளிர்க் கொடியாள் உறக்கமதைத் தழுவியதை
பூம்ணத்து மேனியினைத் தான் தழுவி
புதுக் கதைகள் பல படித்து மேனியெங்கும்
நாமணக்க முத்தமிட்டு மேலும் மேலும்
நல்கு என அவள் வேண்ட மீண்டும் மீண்டும்
ஆவணமாய் அழகு மயில் உடலம் கொண்டு
அனைத்தையுமே பத்திரமாய் எழுதிப் பின்னர்
கோமகளும் உறங்குவதே வழக்கம் என்ன
கோபத்தில் துயில் கொண்டாள் என நினைந்தான்
சாமமிது இவ்வுறக்கம் இதனை நாமும்
சரியாக்ப் பயன் படுத்தல் வேண்டும் என்றே
ஆவலினை நெஞ்சினிலே கொண்டான் அந்த
அழகு மயில் அருகினிலே சென்றான் நின்றான
தாவி அவள் இடையினுக்கு இடையே தன்னின்
தடக்கையைக் கொண்டு வைத்தான் விழித்தாளில்லை
ஆவலதில் மார பிரண்டும் விம்மியோங்க
அழகு மயில் நடிக்கின்றாள் துயில்வாள் போல
காவலனோ வைத்த கையை எடுக்கவில்லை
கண்மணியோ நடிக்கின்றாள் விழிக்கவில்லை
பாவலனாம் ஜெயங்கொண்டப் பாவி மன்னன்
பாப்புனைந்து தந்துள்ளான் பரணி தன்னில்
தாவி வரும் செய்யுளதைப் பின்னால் தந்தோம்
தமிழினத்தார் இப் பெருமை நமக்கே சொந்தம்
செய்யுள்
இத்துயில் மெய்த்துயில் என்று குறித்து இளையோர் அடியிற்
கைத்தலம் வைத்த்லும் பொய்த்துயில் கூர் நயனக்
கடை திறவா மடவீர் கடை திறமின் திறமின்
Saturday, May 3, 2008
பழம் பாடல் புதுக்கவிதை கலிங்கத்துப் பரணி
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
//பாவலனாம் ஜெயங்கொண்டப் பாவி மகன்
பாப்புனைந்து தந்துள்ளான் பரணி தன்னில்
தாவி வரும் செய்யுளதைப் பின்னால் தந்தேம்
தமிழினத்தார் இப் பெருமை நமக்கே சொந்தம்//
இதுதான் அய்யா..உங்கள் டச்!
அற்புதமாக உள்ளது.
இப்படி ஒரு பெட்டகத்தை உருவாக்கித்தந்துவிடுங்கள் போதும்!
Post a Comment