Saturday, May 10, 2008

அம்மணங்கள்

          அம்மண மாய்  வந்தோமே இரு பாலரும
                    ஆடை  அணி   கொண்டதனை மறைத்தும்  நின்றோம்
          அம்மணத்தைம்னத்திற்குள் கொண்டோம்  நின்றோம்
                     அதை  ம்றைத்து  வாழ்வது போல்  ஆட்டம் கொண்டோம்
           அம்மணங்கள் சேரத்  தான் மண்மும் கொண்டோம
                      அவர் சேர்ந்தார் வந்ததங்கும்  அம்மணங்கள
            அம்மணங்கள்  இறுதியிலே  அம்மணமாய
                       அடுக்கி  வைதத விறகுக்குள்  அடங்குமம்மா
           
                               
             

2 மறுமொழிகள்:

said...

//அம்மணங்கள் இறுதியிலே அம்மணமாய அடுக்கி வைதத விறகுக்குள் அடங்குமம்மா//

மிகவும் நுட்பமான , ஆனால் நாம் எல்லோரும் மறைத்து பூசி மெழுகி வாழுகிற வாழ்க்கையின் யதார்த்தத்தை துகிலுரித்திருக்கிறீர்கள் அய்யா...அருமை!
உங்கள் தமிழுக்கு நன்றி!

said...

எம்மணத்தைச் சேர்த்தாலும்
அம்மணமே இறுதி அங்கு
பொய் மணங்கள் அத்தனையும்
போய் ஒழியும் தீ எரியும்
கை மணத்த சாப்பாடும்
கலந்து நின்ற மங்கையரும்
பையனென்றும் பெண்ணென்றும்
பரிந்தெடுத்த உறவாரும்
செய்த நன்றி நினைந்தாரும்
சீக்கிரமே மறந்த்தாரும்
அய்ய அன்று ஒழிந்து விடும்
அம்மணத்தால் சுகம் கூடும்