அமெரிக்க நாட்டினிலே கல்வி கற்க
அனைவருமே சென்றுள்ளார் என்ற போதும்
தமிழுக்காய் சில நேரம் ஒதுக்கி அங்கே
தமிழ்ப் பணியும் செய்வதனை அறிந்த போது
இமைப் பொழுதும் தமிழ் குறித்த எண்ணம் இல்லா
என் இனிய தமிழ் நாட்டை எண்ணி நொந்தேன்
வகைப் படுத்தி தமிழ் வளர்க்கும் இளைஞர்களே
வாழ்த்துகின்றேன் என்றென்றும் வாழியவே
Monday, May 26, 2008
வாழ்த்துகின்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
வாழ்த்துவதில் தவறில்லை!
வரவேற்கிறேன்!
ஆனால், அளவு தெரியாமல் வாழ்த்திட வேண்டாம்!
நாடு தாண்டி வந்தவரில்
எல்லாரும் தமிழைப் போற்றுவதில்லை!
ஏதோ ஒரு சிலரே!
ஆனால், தன் நாட்டில் இருந்துகொண்டே
தமிழைப் போற்றுபவர் ஏராளம்!
இவரைப் பழித்து அடுத்தவரைப்
போற்றுதல் அவசியமில்லை!
நானும் அமெரிக்காவில் இருப்பவனே!
Post a Comment