ஒராண்டாய்ப் பாண்டியனின் பழக்கம் அவர்
உறவு கொள்ளல் அன்றாட வழக்கம்
சீரான அவ்வுறவில் பெண்ணாள் சொல்லும்
சி(ற்)ரிப்பான் செய்தியினைப் பார்ப்போம்
படையெடுக்கும் பாண்டியனைப் பார்த்த அன்றே
பனிமொழியாள் தலை கவிழ்ந்தாள் அவனின் கைகள்
இடையிழுத்து அணைக்கையிலே தனை இழந்தாள்
இதழமுதம் உண்ணையிலே விழி துறந்தாள்
பட படவென்றித யமதும் துடிக்கும் வண்ணம்
பாவி மகன் உறவினிலே தனை இழந்தாள்
அட அட அவள் சொல்லுகின்ற செய்தி கேட்பீர்
அநியாய்ம் அநியாய்ம் தாங்க மாட்டீர்
பொறுக்காத கோபத்தால் ஊடல் கொண்டு
புறங் காட்டி நிற்பாளாம் ஊடல் தீர்த்து
இறுக்காத இறுக்கத்தால் நாணம் கொண்டே
இரு விழியும் தமையிழக்கச் சுகம் காண்பாளாம்
வெறுத்தாள் போல் ந்டித்தவளோ ந்டித்தல் விட்டு
விரும்பியவன் தருகின்ற சுகம் கொள்வாளாம்
நெருப்பாறாய் நின்ற் உடல் நீராறாகி
நிம்மதியாய் உறங்கையிலே அவன் செல்வானாம்
கடுப்பாக ஒரு செய்தி சொல்லுகின்றாள்
கண்மணியாள் கேளுங்கள் வியந்து நிற்பீர்
அடுக் கடுக்காய் உறவு கொண்ட நாட்களிலும்
அவனை இவள் கண்ணாரப் பார்த்ததி்லையாம்
ஊடலிலே திரும்பியதால் பார்க்கவிலையாம்
உடலிறுக்க அப்போதும் பார்க்கவிலையாம்
கூடலிலே மயங்கியதால் பார்க்கவிலையாம்
கொள்ளை மொழிப் பாடல் இதோ கொள்வீர் நீரே
புலவி புறக் கொடுப்பன் புல்லிடின் நாண் நிற்பன்
கலவி களி ம்யங்கிக் காணேன் - நிலவிய சீர்
ம்ண்ணாளும் செங்கோல் வள்வனை யான ஈதாராக்
கண்ணாரக் க்ண்டறியா ஆறு
Thursday, May 1, 2008
பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளயிரம்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
ஐயா,
தங்களின் தமிழை வெகுநாட்களாக ரசித்துவருகிறேன்.தொடரட்டும் தங்கள் தமிழ்த்தொண்டு.தங்களின் மேடைப்பேச்சு குறுந்தகடாக கிடைக்குமா?
Post a Comment