பழம் பாடல் கனிப் பாடல் செயங்கொண்டான்
பக்குவமாய் பொற்குவையாய் தந்த பாடல்
உளம் கொள்வீர் உவகையிலே உச்சம் கொள்வீர்
உண்மையிது பொய்யில்லை உணர்வீர் நீரே
கிளி வளர்த்தாள் ஒரு கிள்ளை சொன்னதெல்லாம்
கிண்ணாரம் கொட்டி உடன் மீண்டும் சொல்லும்
பழி வளர்க்கும் அது என்று தெரியாளாகி
படுக்கையறைக்குள்ளேயே வைத்துக் காத்தாள்
களி நடக்கும் வழி நடக்கும் காதல் கொள்ளை
கட்டிலிலே நடக்கின்ற நேரமெல்லாம்
கிளி இருக்கும் உள் அதனை மறந்தாளாகி
கிறுக்கு மொழி பல உளறி வளர்த்தாள் காதல்
அடுத்து பகல் விடிந்ததங்கே தோழி மார்கள்
ஆற்றுக்கு நீராட அழைக்க வந்தார்
கெடுத்ததங்கு கிளி அவளின் மானம் தன்னை
கெக்கலித்துச் சிரித்து நின்றார் தோழிமார்கள்
அடுக்கடுக்காய்க் காதலனைக் கொஞ்சிக் கொஞ்சி
அவள் உரைத்த வார்த்தையெல்லாம் கிளி அடுக்க
படுத்திடவே தொடங்கி நின்றார தோழிமார்கள்
பாவி மகள் வாய் புதைத்துத் தலை கவிழ்ந்தாள்
செய்யுள்
நேயக் கலவி மயக்கத்தே
நிகழ்ந்த மொழியைக் கிளி உரைப்ப
வாயைப் புதைக்கும் மட நல்லீர்
ம்ணிப் பொற் கபாடம் திறமினொ
Friday, May 2, 2008
பழம் பாடல் புதுக்கவிதை பரணி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment