சங்க காலப் புலவருக்கும் வள்ளுவனாம்
சரியான வழி சொன்ன தலைவனுக்கும்
பங்கமில்லாக் காப்பியத்தின் இளங்கோவிற்கும
பாடி நின்ற பெரும் புலவர் அனைவருக்கும்
இங்கு ஒரு வரலாறு இல்லையென்றே
ஏக்கங்கள் கொண்ட்துண்டு ஒரு காலத்தில்
தங்க நிகர் தமிழ்த் தாயே காத்து விட்டாள்
தமிழர் அவர் தமிழர் என வாழ்வதற்காய்
பாரதியோ பார்ப்பான் அவர் தாசனோரோ
பள பளக்கும் துணி அளிக்கும் முதலியார் காண்
ஊரறிய நாட்டிற்காய் த் தன்னைத் தந்த
உத்தமராம் காமராஜர் நாடாராம் காண்
பேர் பெற்று உலகமெங்கும் பெருமை சேர்த்த
பெரியவராம் காந்தி மகான் செட்டியாராம
கார் பெற்ற வானுலகம் சென்ற பின்னர்
காட்டுகின்றார் அவர் சாதி தேடித் தேடி
வரலாறு இல்லையென்ற வருத்தம் நம்மை
வாட்டியதோர் காலம் போய் நல்ல வேளை
தரமாக அவரெல்லாம் தமிழரென்றே
தான் கொண்டு போற்றுகின்ற பெருமை கொண்டோம்
வரமாக வந்துதித்த அனைவரையும்
வழி மாற்றிச் சாதி என்னும் தீயில் தள்ளி
உரமாக்க நினைக்கின்ற கொடுமை தன்னை
ஒழித்தே நாம் தமிழரென வாழ்வோம் நன்கு
Thursday, May 15, 2008
நல்ல வேளை
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
அத்தனை பெரியவர்களையும் ஜாதிச்சங்க தலைவர்களாக ஆக்கிய கயமைத்தனத்துக்கு சரியான சாட்டையடி!
திருந்துமா சமூகம்?
Post a Comment