உண்மையாய் வாழ்வதற்கே உதித்த தோழன்
உயர் குணத்தான் நற்றமிழான் சொல்லில் வல்லான்
கண்களிலே ஆறாக நீரே ஒடும்
கவலைகளே கொண்டிருந்தும் நேர்மை கொண்டான்
பண்பினிலே மிகச் சிறந்தான் இறுதி வரை
பகட்டின்றி வாழ்ந்திருந்தான் வறுமை தன்னை
நண்பனெனக் கொண்டிருந்தான் உதவுதற்கு
நாட்டினிலே பலர் வந்தார் மறுத்தே வென்றான்
விடுதலைக்காய் சிறை சென்றான் ஏழ்மையினை
வேரறுக்கத் தனையே தான் தந்து நின்றான்
சிறுமைகளை எதிர்ப்பதிலே சீறி நின்றான்
செஞ்சட்டை முதல் தமிழன் அவனே யென்றான்
கடுமைகளைத் தண்டனையாய் அடைந்த போதும்
கலங்கவில்லை மென்மேலும் எதிர்த்து நின்றான
அடிமை விலங்கறுப்பதையே மூச்சாய்க் கொண்டான்
அன்பர் எங்கள் ஜீவாவே அன்றும் வென்றார்
Monday, May 19, 2008
எங்கள் ஜீவா
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
தோழர் ஜீவாவைப் போலவே எளிமையான பாடல்!
நன்று.
Post a Comment