மயிலூர்தி தனில் வந்து முருகன் என்னை
மணம் சேர அழைத்திடுவான் என்று சொல்வார்
வய்லூரில் வந்துதித்த வாரியார்தான்
வானூர்தி தனில் மேலே மரணம் கண்டார்
உயிரான தமிழமுதை உலகமெல்லாம்
ஊட்டி நின்ற ந்மைப் பெற்ற தாயேயானார்
அயராது உழைத்து நின்ற அன்பர்க்கன்பர்
அவர் விருப்ப்ம் போல் மரணம் வந்த தம்மா
போகாத ஊரில்லை தமிழை என்றும்
பொழியாத நாளில்லை அவரைக் கண்டால்
ஆகாத பேர் வழிகள் மனத்தில் கூட
ஆநந்தக் கிருபை தரும் அன்பின் செம்மல்
சாகாம்ல் வாழ்வதற்குப் பிறந்தார் தம்மின
சரித்திரங்கள் சொல்லி நின்ற மாமனிதர்
ஆகா அப்பட்டியலில் அவரும் சேர்ந்தார்
அன்னை தமிழ் பெற்றெடுத்த வாரியாரே
Friday, May 9, 2008
வாரியார் சுவாமிகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
////சாகாம்ல் வாழ்வதற்குப் பிறந்தார் தம்மின
சரித்திரங்கள் சொல்லி நின்ற மாமனிதர்
ஆகா அப்பட்டியலில் அவரும் சேர்ந்தார்
அன்னை தமிழ் பெற்றெடுத்த வாரியாரே////
முத்தாய்ப்பான வரிகள். அருமை அய்யா!
அற்புதம் அய்யா!
வாரியார் சுவாமிகளுடன் உங்களுக்கு ஏற்பட்ட சந்திப்பும், சம்பவங்களும் சொல்லுங்கள் அய்யா!
Post a Comment