காத்திருந்து காத்திருந்து கண்ணிரண்டும் ஒய்ந்த மகள்
பார்த்திருந்த பாவி மகன் பக்கத்திலே வ்ந்தமர்ந்தான்
சேர்த்தணைக்கும் ஆசை யுண்டு சிற்றிடையாள கோபமதால்
பார்த்த படி் காத்திருந்தான் பயமதனால் வேர்த்திருந்தான்
ஆர்த்தசையும் மார்பிரண்டும் அருகினிலே இருந்தும் அவைக்
கோர்த்தணைக்க முடியாமல் குழம்பி நின்றான் தங்க மகன்
வார்த்தைகளால் ஏதேனும் வம்பு வரக் கூடும் என்றே
வாய் திறக்க மாட்டாமல் வாடி அவள் முகம் பார்த்தான்
பார்த்தபடி அமர்ந்திருக்கும் பாவமதைப் பார்த்த பெண்ணாள்
சேர்த்தணைக்க முடியாமல் சிந்தனையில் சிரித்திருந்தாள்
வார்த்தையினைக் காக்காம்ல் தாமதமாய் வ்ந்ததனால்
வடிவ்ழகைக் காட்டாமல படீரென்று எழுந்து சென்றாள்
கோர்த்தவளின் முந்தானைத் தலைப்பினையே பிடித்திழுத்தான
வேர்த்தவளோ விடு விடென்று வேகத்தைக் காட்டுகின்றாள்
பார்த்தவனோ மேலும் மேலும் பற்றியே இழுக்கின்றான்
ஆர்த்தவளோ விடு விடென்று அதையேதான் சொல்லுகின்றாள்
போய்த் தொலையவில்லை அவள் போவதற்கும் மனதில்லை
காய்த்த ம்னம் இல்லாத கனி மனத்தாள் நின்றிருந்தாள்
வாய்த்த நல்ல வாய்ப்பதனில் சேலை தொட்டுப் பார்த்ததையும்
வடிவழகாள் விடச் சொல்லி வாயதனால் சொன்னதையும்
பேர்த்தெடுத்துப் பார்க்கின்றான் பிடி என்று சொல்வதைத்தான்
வார்த்தை மாற்றி விடு என்று வாயழகில் காட்டுகின்றாள்
ஆர்த்து நின்ற் அன்பு மகன அகராதி கண்டு கொண்டான்
வார்த்தை விடு என்று சொன்னால் வா என்னைப் பிடி என்று
செய்யுள்
விடுமினெங்கள் துகில் விடுமினென்று முனி
வெகுளி மென்குதலைத் துகிலினைப்
பிடிமினென்ற பொருள் விளைய் நின்றருள் செய்
பெடை நலீர் கடைகள் திறமினோ
Tuesday, May 6, 2008
பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment