Sunday, May 11, 2008

பழம் பாடல் புதுக் கவிதை ஆண்டாள்

      தழுவாத  மார்பிரண்டு  எனக்கே  இங்கு
               தந்ததிலே நியாயம்  என்ன சொல்லு  கண்ணா
      களவாடிச்செல்லுதற்கு மனத்தை  மட்டும்
                கணக்கிட்டுக் கொண்டு  சென்றாய்  நீதியா சொல்
      அளவில்லாத் துன்பமது  இந்த மார்பால்  
                அடைகின்றேன்  தாங்கவில்லை  என்ன செய்ய
      பளுவாகித்  துடிக்கின்ற இந்த  மார்பைப்
                 பறித்தெறிவேன்  உன்  மார்பில்  வா  வா  நீயும
                                               
                                            ஆண்டாள்

     உள்ளே  உருகி  நைவேனை  உளளோ  இலளோ  என்னாதக்
     கொள்ளைக் கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
     கொள்ளும் பயனொன்றில்லாத்  கொங்கை தன்னைக் கிழங்கோடு
     அள்ளிப்  பறித்திட்  டவன்  மார்பில்  எறிந்தென்  அழலைத் தீர்வேனே

                                 

2 மறுமொழிகள்:

said...

எழுதியது ஆண்டாள். மேலும் அவர் இன்றில்லை. இதையே நம் சமகால பெண் கவிஞர்கள் எழுதினால் இப்போது 'கிழித்து'தோரணம் கட்டியிருப்பார்கள். நான்கு குணமும் என்னாவதாம்... ம்:)

said...

கற்காத காரணத்தால் குதிக்கின்றார்கள்
கனித்தமிழை அறியாமல் தகிக்கின்றார்கள்
பொற்கால தமிழமுதைப்
புரியாரெல்லாம்
புலம்புகின்றார் நாமதனைப்
பொறுத்தல் வேண்டும்
நெல்லை கண்ணன்