ஆண்டு நிற்கும் சோழனவன் அரச குலத்தானை
அவனியெல்லாம் வெல்லுதற்கு பழகி நின்ற ஆனை
தாண்டி அது போர்க் களத்தில் பாய்ந்து வரும் நேரம்
தலைகளோடு குடல்களுமே துண்டாகிப் போகும்
வேண்டி அதைப் பணிந்து நின்றால் பிழைத்தார்கள் இல்லை
விரைவாக உடலழிந்து உயிரிழப்பார் கண்டீர்
காண்பதற்கு அதைப் போன்ற களிறு ஒன்று இல்லை
கை தொழுது நிற்பார்கள் நாட்டிலுள்ள நல்லோர்
பவனியிலே அது அசையும் கம்பீரம் கண்டு
பார்ப்பவர்கள் அனைவருமே மெய் சிலிர்த்து நிற்பார்
அவதி அது தந்த தங்கு பாகர்களுக கன்று
அரசனது பவனிக்கு வர மாட்டேனென்று
புதிது இது பாகருமே புரியாமல் நின்றார்
புலவருக்கோ புரிந்த திது புனனகைத்துச் செனறார்
அரிதான இச்செய்தி மனதினிலே கொண்டு
அரசற்குச் சொல்வதற்கு அரண்மனைக்குள் சென்றார்
போரினிலே பகை மன்னர் கோட்டைகளின் கதவை
பொறுப்பாக தந்தத்தால் பேர்த்தெடுத்த போது
சீர் கெட்டுப் போன அந்தத் தந்தத்தினோடும்
சிரங்களையே கால்களினால் துவைத்தெடுத்த போது்
பேர் பெற்ற பாதங்கள் நகமழிந்து போக
பெண் ஆனை முன்னாலே வருவதற்கு வெட்கி
ஊர் கோலம் வருவதற்கு மறுத்தங்கு ஆனை
உள்ளதென்ற உண்மையினை உவப்போடு சொன்னார்
முத்தொள்ளாயிரம்
கொடி மதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த ந்கமும்-பிடி முன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு
Wednesday, May 21, 2008
பழம் பாடல் புதுக் கவிதை முத்தொள்ளாயிரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment