கை வளைகள் கண்டாயா என்றன் தோழி அவன்
கடல் விளைந்த சங்கினம்தான் உணர்ந்தாயா நீ
மெய்யினிலே மெய்யான மார்பகத்தில் நான்
மெய்ம் மறக்க அணிந்த அந்த மாலையதும்
பொய்யில்லை அவன் கடலில் பிறந்த முத்து
பொதிகை மலைச் சந்தனமே மேனியெல்லாம
அய்யன் அந்தப் பாண்டியனின் உறவே என்றன்
அழகுக்கு அழகு செய்யும் உறவாய்க் கொண்டேன்
கொய்த மலர் மாலையினை அணியக் கூடக்
கொடுப்பினையே இல்லாமல் இந்தத் தோள்கள்
அய்யன் அவன் தோள்களுக்காய் மீண்டும் மீண்டும்
அலை பாய்ந்து நிற்கிறதோ புரியவில்லை
பொய்யில்லை அவன் உடைமை எல்லாம் இங்கே
பொருந்தி எந்தன் மேனியெல்லாம் அழகு செய்ய
அய்ய இந்த தோள்கள் மட்டும் எதற்குதான் இங்கே
அடி போட்டு நிற்கிறதோ புரியவில்லை
முத்தொள்ளாயிரம்
கையதவன் கடலுள் சங்கமால் பூண்டதுவும்
செய்ய சங்கீன்ற செழுமுத்தால் - மெய்யதுவும
பண்பொரு வேல் மாறன் வார்பொதியில் சந்தனமால்
என் பெறா வாடும் என் தோள்
Tuesday, May 27, 2008
பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரரம்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
எந்த மாலை வந்தாலும்
தன் தலைவன் தோள் மாலைபோல் ஆகுமோ என்றிவள் ஏங்குகிறாள்
சந்தன வண்ணத் தோளினனைச் சேர்ந்திடவே
தையலிவள் வாடுகிறாள்
துயர் தீர்க்க எவர் வருவார்!
Post a Comment