கோயில் ஒன்று கட்டுதற்கு ஆசை கொண்டார்
கோடி கோடியாய்க் குவித்த நண்பரொருவர்
ஆயிரம் பல்லாயிரமாய் ஏழை மக்கள்
அரவணைக்க ஆளின்றி அலைகின்றார்கள்
தாயினைப் போல் அவர்களையே ஆதரித்து
தழுவி நல்ல உதவிகளை நீங்கள் செய்தால்
போய் அந்த உதவியெல்லாம் ஆண்டவனின
பொற் பாதம் தனைச் சேரும் அதனை விட்டு
கோயில் ஒன்றும் வேண்டாமே என்று சொன்னேன்
கோபமுற்று தீ விழியால் என்னைச் சுட்டார்
பாயிரங்கள் பனுவல் என்று எதுவும் வேண்டா
படைத்தவனின் படைப்பான மனிதர் கோயில்
ஆங்கவர்க்கு செய்கின்ற உதவி யொன்றே
ஆண்டவனைச் சென்றடையும் கோயில் அல்ல
ஈங்கிதனைத் திருமூலர் சொல்லிச் சென்றார்
எவர் கேட்டார் கோயில் கட்டி அலைகின்றாரே
திரும்ந்திரம்
படமாடும் கோயில் பரமர்க்கொன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க் கங்கா
நடமாடும் கோயில் நம்பர்க் கொன்று ஈயில்
படமாடும் கோயில் பரமர்க் கங்காகும்
Tuesday, May 27, 2008
எவர் கேட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
இருக்கின்ற கோயில்கள் போதும்!
இருப்பவர்க்கு உதவிடுவோம்!
இருக்கும் கோயில்களைக் காத்திடுவோம்
இல்லாதவர்க்கு உதவி செய்வோம்!
Post a Comment