பாண்டியன் வருகின்றான் வீதி வழியாய்
பாய்ந்தோடும் குதிரையில்தான் மிக விரைவாய்
காண்பாள் தன் மகள் பின்னர் துன்பம் நேரும்
கணக்கிட்ட தாய வளும் கதவடைத்தாள்
வான் பார்த்த பயிர் போல பாண்டியனின்
வரவிற்க்காய்க் காத்திருந்தாள் பதறி நின்றாள்
தானவளை அடைத்து வைத்த காரணத்தால்
தாயவளோ மகிழ்ந்திருந்தாள் காவல் தன்னில்
பாண்டியனும் போன பின்னர் தாயும் வந்து்
பக்குவமாய்க் கதவினையே திறந்து வைத்தாள்
தூண்டில் இட்ட மீன் போல் பெண்ணோ அங்கு
துடித்திருப்பாள் என்றவளோ அதிர்ந்து நின்றாள்
பாண்டியனைப் பார்த்தவளாய் மகிழ்ச்சியோடு
பாவை யவள் பாடி நிற்க வியந்து நின்றாள்
காண்பதற்கு வழி ஏது என்று அன்னை
கவனிக்கக் கதவினையே காட்டி நின்றாள்
சாவிக்காய் உண்டான பெருந தொளையில
சரித்திரத்துப் பாண்டியனைப் பார்த்து விட்டாள்
ஆவியினைக் காப்பதற்காய் தொளையைப் போட்ட
அப்பெரிய நல்லவர்க்கு என்ன செய்வேன்
சாவிக்காய் போட்ட தொளை இவளுக் கென்றே
சரியாகப் போட்டதாகக் கருதுகின்றாள
தேவி அந்தப் பெரியவர்க்கு நன்றி சொல்லத்
தேடுகின்றாள் கைம்மாற்றுக் கடனைத் தீர்க்க
முத்தொள்ளாயிரம்
காப்படங்கென்றன்னை கடிமனை இல்ச்செறிந்து
யாப்படங்க ஒடி அடைத்த பின் - மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவம் தொளை தொட்டார்க்கு
என்னை கொல் கைம்மாறு இனி
Tuesday, May 20, 2008
பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment