விழியிரண்டு் தரும் வேதனையும்
விரும்பி மீண்டும் தரும் ஈதலுமே
அழிவில் கொண்டு நமை ஆழ்த்துவதும்
அதிலிருந்து நமை மீட்பதுமாய்
பழிகள் செய்தழுதல் பார்ப்பதுமாய்
பார்த்து நன்கு நமைச் சேர்ப்பதுமாய்
பொழியும் அன்பு செய்து பூப்பதுமாய்
பூத்தது போல் நமை ஒய்த்ததுமாய
கழிவிரக்கம் கொண்டு வாழ வைக்கும்
கண்ணிரண்டும் கொடு நஞ்செனவே
பழியைச் சொல்லுதற்கு வாய் திறந்தால்
பார்க்கும் பார்வையது அமுதெனவே
சுழியக் கடைந்தெடுத்த பாற் கடலில்
சுற்றி வந்த விடம் அமுதமென
விழியிரண்டும் இங்கு பாற்கடலாய
வினைகள் செய்வதிலே நாம் இருந்தோம்
தொழிலில் சிறந்த இந்த விழிகள் தரும்
தொல்லை இன்பமது கொண்டிருந்தோம்
அழித்தல் செய்தது போல் காத்தல் செய்யும்
அவ்விரண்டு விழி அன்பு கொண்டோம்
கொழித்த மன்மதனின் மலர்க் கணை போல்
கொல்ல வந்த விழி நோயாகும்
அழித்து மீண்டும் ஒரு பார்வையினால்
அரவணைக்க வந்த தாயாகும
செய்யுள்
கடலில் விடமென அமு(து) எனமதனவேள்
கருதி வழிபடு படையொடு கருதுவார்
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவு போய்
உருவும் மதர் விழி உடையவர் திறமினோ
Tuesday, May 13, 2008
பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment