காதல் வசப் பட்டாலே பேசுதலில்
கணக்கில்லை வழக்கில்லை நேரமில்லை
பாதகமேயில் லாமல் யாரிடத்தும்
பகன்றிடுவார் தம் உள்ளத தெண்ணமெல்லாம்
ஆதரவு தேடுகின்றாள் ஆசைப் பெண்ணாள்
யாரிடத்து என்பதிலே தான் புலவர் நின்றார்
மாதவத்தான் பாண்டியனின் குதிரையோடு
மங்கை நல்லாள் பேசுகின்றாள் வேண்டுதல்தான்
புகழ்ந்து பின்னர் வேண்டினால் தான் நலம் விளையும்
புரிந்தவளாய்ப் பேசுகின்றாள மங்கை நல்லாள்
அகம் நிறைந்த முகம் காட்டிப் பேசுகின்றாள்
அறிவாக தெளிவாக ஆர்வமாகப்
புகழ் உன்னால் பாண்டியர்க்கு போர்க் களத்தில
புலவரெல்லாம் உனைத்தானே பாடுகின்றார்
தகும் அங்கு காட்டுகின்ற வேகமெல்லாம
தரணி வெல்லப் போர்க்களத்தில் - ஊருக்குள்ளே
கதவிற்குப் பின்னாலே நின்றவனைக்
கண்டு வாழக் காத்திருக்கும் எனக்கு எல்லாம
இதம் செய்ய வேண்டாமா கொஞ்சம் எண்ணு
எல்லாமே போர்க் களமா மெல்லச் செல்லு
வதம் செய்ய நாங்கள் என்ன எதிரிகளா
வடிவழகே மெதுவாய் நீ நடத்தல் ஒன்றே
பதம் செய்யும் எங்களையே பாண்டியனைப்
பார்த்திடுவோம் உயிர் வாழ்வோம் நன்மை செய்க
செய்யுள்
போரகத்துப் பாயு மா பாயாது ஒரு படியா
ஊரகத்து மெல்ல நடவாயோ-பார
மத வெங் களியானை மாறன் தன் மார்பம்
கதவங் கொண்டு யாமும் தொழ
Saturday, May 24, 2008
பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment