வானத்தில் அமுதம் அது இருக்குதென்று
வழிவழியாய் முன்னோர்கள் சொல்லித் தந்தார்
போனால்த்தான் கிடைக்கும் என்றும் அவரே சொன்னார்
பொய்யென்று சிலர் அதனை எதிர்த்தும் நின்றார்
ஆனால் நம் வள்ளுவரோ தெளிவு தந்தார்
அறிவு தந்தார நந்தமையே உணர வைத்தார
வான் தானாய் தீங்கின்றி வழங்குகின்ற
வளர் மழை தான் உயிர்க்கெல்லாம் அமுதமென்றார்
குறள்
வான் நின்று உலகம் வ்ழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று
Sunday, May 25, 2008
திருக்குறள்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
நல்லதொரு குறளுக்கு நற்றமிழில் அரும் விளக்கம்!
//வ்ழங்கி // த. பி.
Post a Comment