Wednesday, May 7, 2008

பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி

     மெல்ல  நடந்தான்  காளையவன்
          மேனி சிலிர்த்தாள்  மங்கையவள்
     அள்ளி அணைத்தான்  காளையவன்
          அடங்க மறுத்தாள்  பெண்ணவளும்
     துள்ளி விழுந்தார்  கட்டிலிலே
          தொடர்ந்த  த்வர் தம் ஆட்டங்களே
     பள்ளி  அறையினில்  இருவருமே
          படித்தனர்  பழம்  புதுப் பாடங்களே


     கள்ளியின் விழிகளில்  காளையவன்
          காளையின்  விழிகளில்  கள்ளி  யவள்
     அள்ளி  அணைக்கையில்  விழிகளெல்லாம்
          அங்கே  யிழந்தன  பார்வைகளே
     தள்ளியே விடுதல் போல்  நடிக்கின்றாள்
          தழுவிடும் காளையோ  துடிக்கின்றான்
     கள்ளியின்  உண்ர்வினைப புரிந்த  பின்னர்
          கட்டித தழுவியே  பாடம் சொன்னான்


     கூடி மகிழ்ந்தனர்  இருவருமே
          குளித்தே மகிழ்ந்தனர்  வேர்வையிலே
     ஆடிக் களித்தவன்  தூங்கி விட்டான்
          அவளோ சேலையைத் தேடுகின்றாள்
     நாடிக் களித்திட்ட நற்  களியில்
          நங்கை தன்னை இழந்த்தனால்
     ஊடி வருகின்ற்  நிலாவொளியை
          உடையென்றெடுத்து உடுத்துகின்றாள்


     பாடு பொருளாய் இதை வைத்து
          பாடி நின்றான் ஜெயங்கொண்டான்
     கூடி அவனைத் தினந்தோறும்
          கூட்டி வருவேன்  உம்மிடத்தில்
     ஆடிப் பாடிப்   போற்றுங்கள்
          அன்னை தமிழாள்  தன்னழகை
     ஒடி  ஒடிக் க்டை திறப்பால்
          உண்மைக் காத்ல்  போற்றுங்கள்

                                  செய்யுள்

     கலவிக் களியின்  மயக்கத்தால்
     கலை போயகலக் கலை மதியின்
     நிலவைத் துகிலென்றெடுத் துடுப்பீர்
     நீள்  பொற்  கபாடம்  திறமினோ
         

2 மறுமொழிகள்:

said...

கூடி நாங்கள் மகிழ்வதற்கு
கூட்டி வாருங்கள் நாள்தோறும்
தேடி இதையெல்லாம் சொல்வதற்கு
தென்னவர் நீரன்றி யாருளார்?

said...

அய்யா என் தந்தையவர்பெயரைக்
கொண்டீர்
அவர்கள் வந்து வாழ்த்தியதாய்
ம்கிழ்வு கொண்டேன்

மெய்யாக உங்களைப் போல்
நல்லவர்க்காய்
மென்மேலும் எழுதி நிற்பேன்
வணக்கம் அய்யா
வாழ்க தமிழுடன்
நெல்லைக்கண்ணன்