Wednesday, May 21, 2008

கம்பரும் கண்ணதாசனும்

இது எனது முதல்..ஒலி வடிவப்பதிவு....

கம்பரும் கண்ணதாசனும் என்ற தலைப்பில் பேசிய உரையின் முதல் பாகம்...!

Get this widget | Track details | eSnips Social DNA

8 மறுமொழிகள்:

said...

அருமை. உங்களின் உரையைப் பல முறை கேட்டு மகிழ்ந்தேன்.

அடுத்த பாகத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

மிக்க நன்றி.

said...

அய்யா,வரவேற்பு உரை நல்கியவர் முனைவர்.திரு.சபா அருணாசலம் அவர்கள்-
குரலில் இருந்தே தெரிகிறது.
சரிதானே?

said...

நன்றி!
இது போல மேலும் ஒலிப்பதிவுகளைத் தாருங்கள்!

said...

அய்யா வணக்கம். வாழ்க தமிழுடன்.
சரியாகச் சொன்னீர்கள்.சபா.அருணாச்சலம் அய்யா அவர்களேதான்.ந்ன்றி.
தங்கள்
நெல்லைக்கண்ணன்

said...

தங்கள் திறனை விஜய் டிவியில் கேட்டது முதல், தங்கள் சொற்பொழிவைக் கேட்கவேண்டுமே எனக் காத்திருந்தேன்!

அருமருந்தாய் அமைந்தது இது!

அதில் கண்ட அதே குசும்பு இதிலும் மிளிர்கிறது!

அடுத்த பாகத்துக்காகக் காத்திருக்கிறேன்!

நன்றி!!

said...

குசும்பெங்கள் நெல்லையின்
குடும்பத்துச் சொத்து
குறையாத தமிழ் எந்தன்
குடும்பத்துச் சொத்து
அசையாத தங்களின்
அன்பே என் சொத்து
அறிவான தமிழாளே
எங்கும் என் சொத்து

தங்கள்
நெல்லைக்கண்ணன்

said...

வணக்கம் ஐயா,

அருமையான உரை... நீங்கள் பங்குபற்றிய நிகழ்வுகளை கொழும்புக் கம்பன் கழகத்தில் ரசித்ததாக நினைவு. தவிரவும் விஜய் தொலைக் காட்சியிலும் தவறாமல் பார்ப்பதுண்டு. தங்களின் இதர உரைகளையும் ஒலி/ஒளிப் பதிவுகள் இருந்தால் இணைக்கலாமே... கேட்க/பார்க்க ஆர்வமாக உள்ளேன்...

said...

அய்யா இன்று தங்களின் வலைபூ இருக்கிற விஷ்யம் தெரிந்தது மிக மகிழ்ச்சி அடைந்தேன், இதுவரை you tube ல் உள்ள தங்களின் கமராஜர் பற்றிய உரையை தினமும் ஒரு முறையாவது கேட்பதுண்டு அதில் உங்களின் மற்ற தலைப்புகள் முழுமையாக இல்லை நிறைய கிடைக்கவில்லை. தங்களின் தமிழின் மீது அப்படி ஒரு காதல் கொண்டவன் நான், இந்த வலைபூவின் இணைப்பை எனது பூவிலும் கொடுத்து விட்டேன் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.