வேல் விழியாள் தன்னிடத்தில் விடையும் பெற்று
விரைந்து சென்றான் போர்க்களத்தில் வேலே கண்டான்
பால் மொழியாள் தன் பார்வை வேலால் பட்ட
பாடங்கள் தனையெல்லாம் நினைந்து நின்றான்
சேல் அகட்டி அதன் வழியாய் தன்னை நெஞ்சில்
சேர்த்தெடுத்து அணைத்தாளின் எண்ணம் கொண்டான்
கோல் மன்னன் வெற்றி கொண்டான் விரைந்து அந்தக்
கோல மயில் தனைச் சே ர ஒடி வந்தான்
வாசலிலே நின்றிருந்தாள் வடிவின் மிக்காள்
வா என்று கேட்காமல் இதழைச் சேர்த்தாள்
பூசலிலே இருப்பாளோ என்ற காளை
பூரித்து மனம் மகிழ்ந்து தன்னைத் தந்தான்
ஊசலென ஆடியவள் ஆடையெல்லாம்
உரித்தவனை ப் பார்க்கின்றாள் கொஞ்சம் கூட
கூசாமல் தன்னாடை களைந்து நின்றாள்
கொங்கை கொண்டு அவன் மார்பில் ஒத்துகின்றாள்
வேல் கொண்ட புண்ணோடு வ்ந்தான் தன்னின்
வேதனைகள் தீர்ப்பதற்காய் அன்பின் மிக்காள்
பால் கொள்ளப் போகுமிரு மார்பகத்தால்
பக்குவமாய் ஒத்துகின்றாள் புண்கள் தன்னில்
வாய் வழியே அமுதமதும் ஊட்டுகின்றாள்
வலி ஒழித்துச் சுகம் அவனும் காண்பதற்காய்
பால் மொழியாள் மருத்துவத்தை பரணி தன்னில்
பாடுகின்றான் ஜெயங்கொண்டப் பாவி மன்னன்
செய்யுள்
தங்கு கண் வேல் செய்த புண்களைத
தட முலை வேது கொண்டு ஒற்றியும்
செங்கனி வாய் அமுது ஊட்டுவீர்
செம்பொன் நெடுங்கடை திறமினோ்
Friday, May 9, 2008
பழம் பாடல் புதுக்கவிதை கலிங்கத்துப் பரணி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment