எழுதி விட்ட கவிதைகளை உடனுக்குடன்
என் அண்ணன் முகிலனிடம் சொல்லிடுவேன்
களி கொண்டு அவர் ஆடும் ஆட்டம் தன்னை
கை பேசி வழியாகக் கண்டு கொள்வேன
தொழுது நிற்பேன் இவ்வன்பை எனக்களித்த
தோன்றாத துணையான இறைவன் தன்னை
பழுதில்லா இவர் அன்பே என்னை மேலும்
பல ஆண்டு உயிரோடே வாழச் செய்யும்
குடந்தை பெற்ற பெருஞ் செல்வம் எங்கள் அண்ணன்
குளிர் தமிழின் வளர் தமிழின் கொற்றம் காண்பீர்
மடந்தை தமிழ் பெற்றெடுத்த ம பொ சி யாம்
மாபெரிய தமிழ் அறிஞர்க் குற்ற பிள்ளை
இடந் தெரிந்து அன்னை தமிழ் இவரிடத்தில்
எனைக் கொண்டு சேர்த்தாளே என்ன சொல்வேன்
கடன் பெற்றேன் இவர் பிள்ளை தன்னிடத்தும்
கைம்மாறு என்ன செய்வேன் புரிந்தேன் இல்லை
Sunday, May 25, 2008
என் அண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
குடந்தை பெற்ற பெருஞ்செல்வம் குணக்கடலாம் மபொசி மகன்
அவர் பெற்ற அரும்பிள்ளை தான் புதுக்கோட்டை வந்தவனோ
எப்படியோ எமக்கெல்லாம் இனியதமிழ் விருந்திங்கு
நிதம் படைத்து மகிழ்[க்]கின்றாய் கடலே வாழி!
Post a Comment