அம்பலத்தில் நல்லவர் போல் ஆடுகின்றார்
அறைகளுக்குள் லீலைகளில் கூடுகின்றார்
தம் பலத்தில் அத்தனையும் நடப்பதுவாய்
தம்பட்டம் அடிக்கின்றார் மேலும் மேலும்
வெம்பி இங்கு ஏழையர்கள் துன்பமுறும்
வேலைகளைச் செய்வதிலே வெட்கமுறார்
அம்புவியில் தங்களது செய்கை யெல்லாம
ஆரறிவார் ரகசியம் என்றெண்ணுகின்றார்
நல்லவரோ இவற்றையெல்லாம் கண்டு கண்டு
நாள் தோறும் சிரிக்கின்றார் அவர் உணர்வார்
எல்லை யற்ற பரம் பொருளாம் இறைவன் அவன்
எங்கே தான் இல்லை என்றும் பார்த்திருப்பான்
கள்ளமற்றோர் உணர்ந்திருந்தார் தவறு இல்லை
களங்கமுள்ளோர் மறந்திருந்தார் தவறுகின்றார்
அள்ளி அருள் தருகின்ற இறைவன் அவன்
அனைத்தையுமே அறிந்திருப்பான் என்றுணர்க
திருமந்திரம்
கண்காணி இல்லை யென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி ஆகக் கலந்தெங்கும் நின்றானை
கண்காணி கண்டார் களவொழிந்தாரே
Wednesday, May 28, 2008
திருமந்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
தந்திரங்கள் கொண்டதிரு மந்திரத்தின்
தன்னேரில் லாதவுயர் தத்துவங்கள்
முந்திவர விருத்தத்தில் வரைந்து தந்த
முனைகூர்த்த புதுமையினில் மகிழ்ந்தேன் அய்யா!
செந்தமிழர் ஆன்மீகச் சுவடாய் நிற்கும்
ஒப்பில்லா நூலிதற்கு நீவீர் இங்கு
சந்தமுறும் செழுங்கவியில் உரைகள் தந்தால்
சீர்பெற்று நற்பணியாய் நிலைக்கும் அன்றோ!!
மிக அருமை அய்யா,
"இறைவன் ஒருவன் இங்கிருந்தால்
இவைகள் ஏன் நடக்கிறது?
அவன் கல்லாகி போனதிலே
காரணமும் இருக்கிறது"
என்றும் அன்புடன்
இளையகவி
கண்காணி காணுகின்ற காட்சியிலே பிழையில்லை
கண்காணி அனைத்தையுமே கண்ணாரக் கண்டிருப்பான்
கண்காணி அறிகின்ற கோலத்தில் இதுவுமொன்றே
கண்காணி அல்லாமல் காட்சிகளும் ஏதிங்கே!
Post a Comment