கண்ணனை எண்ணி எண்ணிக் களித்தலுக் காளேயாகி
எண்ணிய எண்ணம தன்னால் இளைத்தங்கு மயக்கமாகி
புண்ணியம் செய்த ஆண்டாள் பூவுடல் தளர்தல் கண்டு
கன்னியர் எல்லாம் கூடிக் களி மயில்த் தோகை கொண்டு
பொன்னுடல் துன்பம் தீரப் பூப்போல வீசி நின்றார்
என்ன நீர் செய்தீர் அய்யோ இதனாலா மயக்கம் தீரும்
மன்னவன் இடுப்பின் பட்டில் மாலவன் வாடை உண்டு
அன்னவன் இடுப்பின் பட்டை அவிழ்த்திங்கு வீசுவீரே
பெண்ணாளின் உள்ளம் காணாப் பெருந்தகையாளன் தன்னால்
கண்ணாளா என றழைத்தும் காணாமல் மயக்கமானேன்
நன்னாரி வேரைக் கொண்டு நல்லதோர் விசிறி செய்து
என்னதான் வீசினாலும் எப்படி மயக்கம் தீரும்
பெண்ணாரே அவன் இடுப்பில் பேணலால்ச் சேர்ந்த பட்டு
தன்னாலே வீசினால்தான் தளிர்க் கொடி நானும் வாழ்வேன்
என்றாளே ஆண்டாள் அந்த ஏக்கத்தைப் பாட்டும் ஆக்கித்
தந்தாள் காண் படித்துப் பாரும் தமிழாளின் இனிமை தன்னை
ஆண்டாள்
கண்ணன் என்னும் பெருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணிற் புளிப் பெய்தாற் போல புறம் நின்றழகு பேசாமே
பெண்ணின் வருத்தம் அறியாத பெம்மான் அரையின் பீதக
வண்ண ஆடை கொண்டென்னை வாட்ம் தணிய வீசீரே
Monday, May 12, 2008
பழம் பாடல் புதுக்கவிதை ஆண்டாள்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
நல்லாயிருக்கு.
Post a Comment