Friday, May 23, 2008

உண்மை வீரர்

              விடுதலைக்காய்ப்  போரிட்ட  வீரர்  தம்மின்
                     விடுதலைக்காய்  நீதி மன்றம் தன்னில்  நின்றார்
              பழுதில்லா மனத்திற்குச்  சொந்தக் காரர்
                      பார்த்தாலே  உறுதியினைக் காட்டும் தோற்றம்
              வருகிறது  ஒரு  தந்தி  அவருக்கென்று
                      வந்ததனை  வாசித்தார்  பையில்  வைத்தார்
              விறு விறுப்பாய்  வாதங்கள்  தன்னை வைத்தார்
                       வீரர்களின்  விடுதலைக்காய்  அடுக்கடுக்காய்


              வெள்ளையர்  தான்  நீதிபதி இருந்த  போதும
                        விரிவான  விளக்கங்கள்  கேட்டு  நின்றார்
              அள்ளி வைத்த  வாதங்கள்  அனைத்தும்  கேட்டு
                         அடுத்து  ஒரு  நாள்  குறித்தார்  வழக்கிற்காக
               மெள்ள  அந்த  தந்தி என்ன  அய்யா  என்றார்
                          மென் நகையாள்  என் மனைவி மறைந்தசெய்தி
                சொல்லி விட்டு பின்னர்தான்  கிளமபிச் சென்றார்
                           ஜோதியவர்  வல்லபாய்  படேலே  அய்யா
                           
                           
                        

2 மறுமொழிகள்:

said...

இரும்பு மனிதர் எனச் சும்மாவா சொன்னார்கள்!


//கிளமபிச் சென்றார///

இறுதி எழுத்தில் தட்டச்சுப்பிழை.
"சென்றார்"

said...

வாழ்க தமிழுடன். வணக்கம் அய்யா.

தட்டச்சுப் பிழை தன்னை
திருத்தி விட்டேன்
தவறுக்கு எனை நீங்கள்
பொறுத்தல் வேண்டும்

தங்கள்
நெல்லைக்கண்ணன்