Wednesday, October 15, 2008

தந்தை மொழி

அன்பு வழி வாழ்ந்திருந்து வழியும் சொன்ன
அருள் வடிவாம் வள்ளலார் வாழ்வில் ஒரு நாள்
தன் புகழை இனத்தாலே பெருக்கிக் கொண்ட
தனித் துறவி ஒருவரையே சந்தித்தாராம்
பண்பு இன்றி அத் துறவி வட மொழிதான்
பல மொழிக்குத் தாய் என்று அறிவித்தாராம்
அன்பு மொழி வள்ளலார் ஆம் ஆம் என்று
அத்தனைக்கும் தந்தை மொழி தமிழ் என்றாராம்

2 மறுமொழிகள்:

said...

தமிழை முன்னெடுத்த புரட்சித் துறவி வள்ளற்பெருமான் கழல் வாழ்க!

ஐயா, தங்கள் வலைப்பதிவில் அரிய பாக்களைத் தொடர்ந்து படித்து மகிழ்ந்து வருகின்றேன்.

said...

வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளார் பெருந்தகையின் வாக்கு மிகவும் சரிதான். எம் தமிழால் பிறந்த பிள்ளைகள் பற்பல... ஆனால் அவையொல்லாம் இந்தத் தந்தையை (தமிழை) முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் நவீன கால பிள்ளைகள் போல் அல்லவா உள்ளன ஐயா?