Monday, January 11, 2010

திருந்துவாரா

தமிழ் படமாம் சந்தியின்றி வருகிறதாம்
தமிழ்த் தலைவர் சந்ததியின் படமாம் இது
தமிழ்ப் படமாய் திருத்து தற்கு விருப்பமில்லை
தமிழர்களே இக் கொடுமை கேட்டீரோ நீர்
அமிழ்தினிய தமிழ் மொழியைக் காப்பவராம்
அவர் குடும்பம் இழைக்கின்ற அவலம் இது
தமிழுக்கு மாநாடு நடத்தப் போகும்
தலைவர் அவர் கேட்பாரா திருத்(ந்)துவாரா?

1 மறுமொழிகள்:

said...

என்ன தமிழ் என்ன தலைப்பு படப் பெட்டியத் திறந்தால்,
உள்ளே படச்சுருள் நடிகையின் தொப்புளைச் சுற்றித்தானே சுருண்டிருக்கும் .”அதில் சந்தி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ,என் சந்ததி வாழ்ந்தால் போதும்” என்று நினைத்திருப்பாரோ என்னவோ