Wednesday, June 11, 2008

வேறொன்றில்லை

              பணம்  தேடி  ஒடுகின்றார்   ஒடி ஒடிப்
                    பல கோடி  சேரக்கின்றார்  சேர்த்த பின்னர
              தினம்  தேடி  ஓடுகின்றார்  மருத்துவரை
                    தின்பதென்றால்  மாத்திரைகள்  என்று வாழ
              முனம் தேடி  உடல்  காக்க  நேரம்  கொஞ்சம்
                     முறையாக்கி உடற் பயிற்சி கொண்டிருந்தால்
               தினம்  விரும்பும்  நல்லுணவை  உண்டு  வாழும்
                      தேகமதைக் கொண்டிருப்பார் மறந்தே போனார்


               பணம் மட்டும்  வாழ்க்கையில்லை வாழ்வதற்கு
                      பலமான  உடல்  வேண்டும் அன்பும் வேண்டும்
               குணம்  வேண்டும்  இல்லையெனில் உலகம்  உம்மை
                      கும்பிட்டுப் போற்றாது  உணர  வேண்டும்
               இனம்  சாதி  மொழி  என்ற  எண்ணம்  இன்றி
                       எல்லோரும்  போற்றுகின்ற்  வாழ்க்கை வேண்டும்
               உளம் கொள்வீர்   நண்பர்களே  கொண்டு விட்டால்
                        உமையன்றி தெய்வம்  இங்கு  வேறொன்றிலை
                    

3 மறுமொழிகள்:

said...

//எல்லோரும் போற்றுகின்ற் வாழ்க்கை வேண்டும்
உளம் கொள்வீர் நண்பர்களே கொண்டு விட்டால்
உமையன்றி தெய்வம் இங்கு வேறொன்றிலை//



மிகச்சரியாக சொன்னீர்கள் அய்யா!

said...

Yellame nandraga sonneer..!
Nalla gunam kondavarai dhaivam aakkudhal thaguma..?
Idikkudey..!

said...

காப்பாற்றி நிற்கின்ற நல்லவரைக்
கடவுள் எனச் சொல்லிடுதல் எம்மியல்பு
வாய்ய்ப்பாடாய்ச் சொல்லியே பழகியுள்ளோம்
வருத்தமது வேண்டாம் என் இனிய
தோழ
வாழ்க தமிழுடன்.நன்றியுடன்.
அன்புடன் நெல்லைக்கண்ணன்