Saturday, May 3, 2008

அய்யா நாங்களெல்லாம்

     கொய்யாப் பழம் விக்கும் கோபாலு  நான்
          கோரைப் புல் விக்கின்ற  மாயாண்டி  நான்
     அய்யா  நான்  மீனு  விக்கும் மேரியம்மா
          அவதான்ய்யா  கீரை  விக்கும்  காளியம்மா
     கையாலே வண்டி  தள்ளி  தெருத் தெருவாய்
          காய்கறிகள் வித்து வாழும்  கண்ணுத் தாத்தா
     அய்யா  நாங்களெல்லாம்  ஒட்டுப் போட்டோம்
          அதனாலா எங்களையே ஒச்சுப் போட்டே

     மேல்  நாடு  கீழ்  நாடு  எல்லாம்  சுத்தி
          மேலும்  மேலும்  பணம்   சேக்கும்  அய்யாமார
     ஊர்  ஊராக் கடை  திறந்து  எங்க  வாழ்வ
          ஒழிப்பதற்கு  ஏற்பாடு செய்தே  போட்டீர
     கார்  மேல்  போறேரு  ஒமக்கு எங்க
          கவலைகளைச் சொல்லுதற்கு  யார் இருக்கா
     நார்  நாராய்க்  கிழிக்கின்ற  தோழர்  மாரும்
         நாள  வரும்  தேர்தலுன்னு  வாயடைக்கா

     சார்வா  ஒங்க  மோசடியால்  அழியப்  போகும்
         சங்கடத்தில்  என்னிக்கும்  வாழும்  நாங்க
     மோர்  வித்துப் பிழைப்பதற்கும் வழியடச்சு
          மொத்தக் கட  தொறக்க  வ்ழி எல்லாம்  செஞ்சீர்
     தேர்  போல  பிழைப்புமக்கு   ஒடணும்ன்னா
          தெருவோரம்  அச்சாணி  நாங்கதான்யா
      ஊர்  ஊரா  வருவேர்ல்லா  ஒட்டுக் கேட்டு
          ஒத  இருக்கு  அன்னிக்கு  வாரும்  பாப்போம்
     
          

3 மறுமொழிகள்:

said...

அற்புதம் அய்யா!
ஒரு கிராமத்தானின் மனநிலையையும்
உலகமயமாக்கலையும், பெரும் வணிகர்களையும் ஒரே கோட்டில் இணைத்து, அசத்திவிட்டீர்கள்!

said...

சுரேஷ் நலமா?

said...

சுரேஷ் நலமா?