Wednesday, May 21, 2008

மறைந்தே போவீர்

       விஷத்தோடு  விஷம்  சேர்த்து  அருந்தி விட்டு
                    வீழ்ந்திறந்தார்  ஏழை  மக்கள் அய்யோ  பாவம்
        திசை  தோறும்  இக் கொடுமை பல  விதத்தில்
                      திண்டாட  வைக்கிறது  ஏழை  வாழ்வை
         பசையுள்ளார்  விற்கின்றார்  விற்பதற்கு
                       பாதுகாவல்  காவலரே  என்கின்றாரே
         வசையிதனை  ஒழிக்காமல்  வாழ்ந்தீரென்றால்
                       வாழ்ந்தென்ன  செத்தவுடன்  மறைந்தே  போவீர்

3 மறுமொழிகள்:

said...

அன்பிற் சிறந்த இளைய கவி அய்யா
அவர்களுக்கு எனது வணக்கங்கள்.
வாழ்க தமிழுடன்.கடைசி இரண்டு
வரிகளுக்கு விளக்கம் கேட்டிருந்தீர்கள்.
ஏழைகளை தொடர்ந்து வீழ்த்திக்
கொண்டிருக்கின்ற இந்தக் கொடுமை
களை ஒழிக்க வேண்டியவர்கள் இது
குறித்துச் சிந்திக்காமல் இருந்தால் இன்று
அவர்கள் வாழ்வது போலத் தோன்
றினாலும் அவர்களின் மரணத்தோடு
அவர்கள் பெயரும் மறைந்து போகும்
உண்மையாக மக்களுக்காக தங்களைத்
தந்த பெருந்தலைவர் காமராஜர் அன்புத்
தலைவர் கக்கன் போன்றவரகள இன்றும் வாழ்கின்றார்களே.அந்தப் பெருமை இவர்களுக்குக் கிடைக்காது
என்பதைக் குறிப்பதே இந்த வரி வடிவங்கள்.ந்ன்றி அய்யா.
தங்கள் நெல்லைக்கண்ணன்

said...

தங்களின் விளக்கத்திற்க்கு எனது நன்றிகள் பல

said...

நன்றிக்கு நன்றி சொன்னேன்
இளைய கவி அய்யா
நலமாக வாழ்ந்திடுக
தமிழோடு என்றும்


தங்கள்
நெல்லைக்கண்ண்ன்