Friday, May 16, 2008

காப்பாற்றி நின்றார்

         பிச்சையெடுத்தேனும்  நல்ல  கல்வியினைப்
                     பெற்றிடுங்கள்  என்று சொன்னார்  நமது  முன்னோர்
         இச்சொல்லை மாற்றுதற்காய்  ஒருவர்  வந்தார்
                      ஏழைகளை  வாழ வைக்க  என்றே  வந்தார்
         பிச்சையினை  நான்  எடுப்பேன்  உங்களுக்காய்
                       பிள்ளைகளே  உங்கள்  தொழில்  படித்தல்  என்றார்
         கச்சை  கட்டி  கல்வி  தந்து  ஏழைகளைக்
                       காப்பாற்றி  நின்ற தெங்கள்   காமராஜர்
                      

2 மறுமொழிகள்:

said...

சொல்லியசொல் அத்தனையும்
உண்மையென்று யானுரைப்பேன்

வல்லியதாய் பகட்டெதையும்
செய்யாமல் சென்றதுதான்

நல்லவராம் இவருடைய
பிழையென்று பகர்ந்தாலும்

வல்லவராம் இவரால்தான்
யானிங்கு படித்ததுண்மை!

கர்மவீரரைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டே இருப்பதுதான் நாம் அவருக்குச் செய்யும்..... தமிழகத்துக்குச் செய்யும் கடமை என நினைக்கிறேன் ஐயா!
நன்றி...பனிக்கும் கண்களுடன்!

said...

மக்களது வரிப்பணத்தை எண்ணியெண்ணி
மக்களுக்காய்ச் செலவழித்த
மக்கள் தொண்டன்
தக்கதொரு நேர்மையினை
சொத்தாய்க் கொண்ட
தனித்தமிழன் தமிழ்த்தாயின்
முத்த மகன்
மிக்க பல நன்மைகளை
நமக்கே செய்தான்
மீண்டும் அவன் போல் இங்கே
யார் வருவார்
தக்க நல்ல கல்வியினை
ஏழைகட்காய்த்
தாயாகித் தந்து நின்ற
மாமனிதன்
பக்கம் நின்ற தொழுகின்றேன்
மீண்டும் மீண்டும்
பாடிப் பாடி் மகிழ்கின்றேன்
வாழ்க அவன்